அக்கரைப்பற்றில் கொள்ளை நாடகம் ,கூலிக்கு மாரடித்த காரைதீவு சந்திரன் உயிரிழப்பு




#இஸ்மாயில்உவைசுர்ரஹ்மான்.
அக்கரைப்பற்று பொத்துவில் வீதியில் நேற்றிரவு கொள்ளை நாடகம் அரங்கேறியது. தனியார் வியாபார நிலையமொன்றுக்கு சுமார் 80 இலட்சம் ரூபா பணம் கொடுக்க வேண்டிய,  பட்டியடிப்பிட்டி, தனியார் உரிமையாளர் இக் கொள்ளை நாடகத்தினை இயக்கி, ஈடுபட்டுள்ளதாக முதற் கட்ட விசாரணையில் தெரியவரகின்றது.


கார் ஒன்றில் ரெஜிபோம் பெட்டியில் பின் பகுதியில்,காசு கொண்டுவருவதாக கடன் பட்டவர் கூறியுள்ளார். கார் வந்து உரிய இடத்தை அடைந்ததும், பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் பின் கண்ணாடியை உடைத்து காரில் உள்ள பணத்தை எடுத்துச் சென்றுள்ளனர்.

பணத்தை   எடுத்துச் சென்றதாக சோடிக்கப்பட்டோர், வேகமாகச் சென்று விபத்தில் சிக்குண்டுள்னர். விபத்தில் சிக்கி கடுங்காயமுற்றவர், அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவுடன் இறந்துள்ளார். அவரது அடையாள அட்டையைப் பார்த்தபோது, அவர் காரைதீவு வெட்டு வாய்க்கால் வீதியினைச் சேர்ந்த சந்திரன் சங்கர்  என அடையாளங் காணப்பட்டுள்ளார். அவருடன் பயணித்த மற்றைய நபர் அக்கரைப்பற்று வைத்தியசாலையில், காயங்களுடன் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சந்தேக நபர் ஏறாவுரைப் பிறப்பிடமாகக் கொண்டரும் அக்கரைப்பற்றுப் பகுதியில் திருமணம் முடித்த தமிழ் சகோதரர் ஆவார்.

இக் கொள்ளை நாடகத்திற்கு திட்டம் தீட்டியவர், கடன் பெற்ற பட்டியடிப்பிட்டி கடைச் சொந்தக் காரரான நிசாம் தாஹிர் என்பதாகவும், தாம் ரூபா 30 000/= பணத்திற்கு கடன் கொடுக்க வேண்டியவரால்.இக் கொள்ளை நாடக பணிக்கு அமர்த்தப்பட்டதாகவும், காருக்குள் பணம் இருக்கவில்லையென்றும் தெரிவித்துள்ளார்.

அக்கரைப்பற்று பொலிசார் விசாரனைகளை முன்னெடுத்து வருகின்றனர்.