புளியங்குளத்தில்,புது மணத் தம்பதிகளின் சடலம் மீட்பு




வவுனியா, புளியங்குளம் இந்தியன் விலோஜ் பகுதியில் வீடொன்றில் இருந்து கணவன் மனைவி இருவரது சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

குறித்த இருவரும் 3 மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்துக் கொண்டவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. 

அவர் இருவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணகைளில் இருந்து தெரியவந்துள்ளது. 

நேற்று முன்தினம் குறித்த இருவரும் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

சம்பவம் தொடர்பில் புளியங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணகளை மேற்கொண்டு வருகின்றன