#InternationalCriminalCourt
அமெரிக்கர்களுக்கு எதிராக விசாரணை நடத்தினால் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு எதிராக தடைகள் விதிக்கப்படும் என அமெரிக்கா அச்சுறுத்தியுள்ளது.
#InternationalCriminalCourt
ஆப்கானிஸ்தானில் கைது செய்யப்பட்டவர்களை கொடுமை செய்தது தொடர்பாக அமெரிக்க ராணுவத்தை சேர்ந்தவர்களை விசாரிக்க நீதிமன்றம் யோசனை செய்து வருகிறது.
இந்த நீதிமன்றம் "சட்டவிரோதமானது" என்றும் "எங்கள் குடிமக்களை பாதுகாக்க எதுவேண்டுமானலும் செய்வோம்" என தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் தெரிவித்துள்ளார்.
2002ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அந்த நீதிமன்றத்தில் சேராமல் இருக்கும் டஜன் கணக்கான நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று.
அமெரிக்காவுக்கு ஏன் இந்த கோபம்?
போல்டன் நீண்டகாலமாகவே நீதிமன்றத்தை விமர்சித்து வருகிறார் ஆனால் திங்களன்று அவர் பேசியது இரண்டு விஷயங்கள் குறித்து.
ஒன்று, நீதிமன்றத்தின் விசாரணையாளரான ஃப்டூ பென்சூடாவின் கோரிக்கை படி ஆப்கானிஸ்தானில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் குறித்து விசாரிப்பது அதில் எந்த ஒரு அமெரிக்க ராணுவத்தினரும் உளவுத்துறை அதிகாரிகளும் விசாரிக்கப்படுவர்.
ஆனால் ஆப்கானிஸ்தானோ, எந்த ஒரு அரசாங்கமோ இது குறித்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு கோரிக்கை விடுக்கவில்லை என போல்டன் தெரிவித்தார்.
இரண்டாவது, காஸா மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து இஸ்ரேலை நீதிமன்றத்தின் முன் நிறுத்த வேண்டும் என்ற பாலத்தீனத்தின் நடவடிக்கை அமெரிக்காவில் உள்ள பாலத்தீன விடுதலை இயக்க செயல்பாடுகளை அமெரிக்கா மூடுவதற்கு இதுவும் ஒரு காரணம் என போல்டன் தெரிவித்துள்ளார்.
நீதிமன்றத்தின் யோசனை அமெரிக்க இறையாண்மைக்கும் தேசிய பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் எனவும் போல்டன் தெரிவித்துள்ளார்.
"நாங்கள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துடன் ஒத்துழைக்க மாட்டோம். நீதிமன்றத்தில் சேர மாட்டோம். நீதிமன்றம் தானாகவே மறித்து போகும். ஏற்கனவே எங்களுக்கு அது மறித்து போன ஒன்றுதான்" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா எம்மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்?
அமெரிக்காவிற்குள் நுழைய நீதிமன்ற நீதிபதிகளுக்கும், வழக்கறிஞர்களுக்கும் தடைவிதிக்கப்படும் மேலும் அமெரிக்காவில் உள்ள அவர்களின் நிதியங்களுக்கு தடை விதிக்கப்படும்.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்
நாட்டின் அதிகாரிகள் விசாரிக்க இயலாத பட்சத்தில் இந்த சர்வதேச குற்றவியல் நீதிமன்றமானது இனப்படுகொலை, மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்கள், போர் குற்றங்கள் ஆகியவற்றை விசாரித்து தீர்ப்பு வழங்கும்.
இது குறித்து நீதிமன்றம் வெளியிட்ட அறிக்கையில், 123 நாடுகளின் ஆதரவு தங்களுக்கு இருப்பதாகவும், தங்களுக்கு வகுக்கப்பட்ட சட்ட விதிகள்படி கடுமையாக நடந்து கொள்ளப்படும் என்றும், சுதந்திரமாகவும், பாரபட்சமின்றியும் செயல்பட உறுதி பூண்டுள்ளதாகவும் தெரிவித்தது.
ரோமில் ஏற்பட்ட ஒப்பந்தந்தத்தின் அடிப்படையில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் 2002ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆனால் அப்போதைய அமெரிக்க அதிபர் புஷ் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்திவிட்டார்.
ஐ.நாவுக்கான அமெரிக்க தூதராக போல்டன் புஷ் நிர்வாகத்தில் பணியாற்றியுள்ளார்.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில், பிரிட்டன் உட்பட 123 நாடுகள் உறுப்பினராக உள்ளன. மேலும் 70 பேர் அதில் உறுப்பினராக இல்லை.
ஆனால் ஒபாமா அதிபராக இருந்த காலத்தில் நீதிமன்றத்துடன் ஒத்துப் போக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.
Post a Comment
Post a Comment