விசேட தேவையுடையோருக்கு




(அப்துல்சலாம் யாசீம்)

திருகோணமலை மாவட்டத்தில் விசேட தேவையுடையோருக்கான உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு (29) இன்று திருகோணமலை நகராட்சி மன்ற கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களம், கொழும்பு டெலிவிஷன் மற்றும் கல்கமுவ ஞானதீப பௌத்த பிக்குவும் இணைந்து உபகரணங்களை  வழங்கி வைத்தனர்.

இதன்போது திருகோணமலை மாவட்டத்தில்  விசேட தேவையுடையோர் 237 பேருக்கு உபகரணங்கள்  வழங்கி வைக்கப்பட்டன.

 இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகம மற்றும் அவரது பாரியார் தீப்தி போகல்லாகம கலந்து கொண்டதுடன் விசேட தேவையுடையோருக்கு  நாற்காலிகள், ஊன்றுகோல்கள்  போன்றவற்றை வழங்கி வைத்தனர். 

இதேவேளை கல்கமுவ ஞானதீப பௌத்த பிக்குவினால் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள 500 பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கப்பட உள்ளதுடன் கர்ப்பிணிப் பெண்களுக்கும் போசாக்கு பொதிகள்  வழங்கப்பட  உள்ளதாகவும் கல்கமுவ ஞானதீப பௌத்த பிக்கு தெரிவித்தார். 

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் அசங்க அபேவர்தன. கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ஏ. எச்.எம் அன்சார், கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர்  யூ.எல்.ஏ.அஸீஸ் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஐ.கே.
ஜி. முத்துபண்டா, கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் எஸ் சிவகங்கா ஆகியோர் கலந்து கொண்டனர்.