புதிய வாகனங்களை இறக்குமதி செய்யத் தடை




எதிர்வரும் ஒன்றரை ஆண்டு காலத்துக்கு, அமைச்சர்களுக்கோ அல்லது அமைச்சுக்கோ புதிய வாகனங்களை வௌிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதை முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளதாக, நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.
மாத்தறை றாகுல வித்தியாலயத்தில் நடைபெற்ற பரிசளிப்பு நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்துரைத்த அவர்,
அரச துறை உத்தியோகத்தர்கள் 06 மாதங்களுக்கு வாகனங்களை இறக்குமதி செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும்
அத்துடன், இந்த நாட்டு பொருளாதாரத்தை பலப்படுத்துவதற்காக எதிர்வரும் நாட்களில் மேலும் முக்கிய பல தீர்மானங்கள் எடுக்க வேண்டி ஏற்படும் எனத் தெரிவித்தார்.