பொலிஸ் அதிகாரத்தை விட மக்கள் அதிகாரம் பலமானது




அனுமதி வழங்கப்பட்டுள்ள வீதி தவிர வேறு மார்க்கத்தில் பயணம் செய்தால் அந்த பஸ்களுக்கு வழங்கப்பட்டுள்ள வீதிப் போக்குவரத்து அனுமதிப்பத்திரத்தை இரத்து செய்வதாக போக்குவரத்து அதிகாரசபையின் பிரதானி கூறியிருப்பது சட்டவிரோதமானது என்று கூட்டு எதிர்க்கட்சி கூறியுள்ளது. 

கூட்டு எதிர்க்கட்சி இன்று (04) கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க இதனைக் கூறினார். 

பஸ் ஒன்று அனுமதிக்கப்பட்ட வீதி அல்லாமல் வேறு மார்க்கத்தில் பயணம் செய்தால் 1000 ரூபா அபராதம் விதிக்க மாத்திமே முடியும் என்று அவர் கூறியுள்ளார். 

அதேநேரம் தேவையான அதிகாரத்தை பயன்படுத்துவோம் என்று பொலிஸ் மா அதிபர் கூறியிருந்த கருத்துக்கு பதிலளித்த அவர், பொலிஸ் அதிகாரத்தை விட மக்கள் அதிகாரம் பலமானது என்று கூறினார்.