சுமூகப்பற்றாளர் சகோதரர் அப்துல் றஸாகின் நல்லடக்கம் நாளை




சிறந்த சமூகப்பற்றாளர் சகோதரர் அப்துல் றஸாக் திடீர் சுகயீனம் காரணமாக அண்மையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று (08) சிகிச்சை பலனின்றி வபாத்தானார்.
ஏறாவூரை பிறப்பிடமாகக் கொண்டு லண்டனில் குடியுரிமை பெற்று குடும்பத்தோடு வாழ்ந்து வந்த இவர், இலங்கை, பர்மா, பலஸ்தீன், சிரியா, காஷ்மீர் போன்ற இடங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற அநியாயங்களுக்கு எதிராக மிக தைரியமாக நின்று குரல் கொடுத்து போராடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அப்துல் ரஸாக் அவர்களின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் நாளை (10) திங்கட்கிழமை காலை 11.30 முதல் நண்பகல் 12.45 மணி வரை Islamic Center MK, Trubys garden, Coffee Hall MK6 5HA, United Kingdom எனும் விலாசத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டு, லுஹர் தொழுகையின் பின் பி.ப 3.00 மணிக்கு Woburn Avenue, wolverton MK12 5AZ எனும் விலாசத்திலுள்ள பொது மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
அன்னாரின் நற்காரியங்கள் அனைத்தையும் அங்கீகரித்து மேலான சுவன வாழ்வை எல்லாம் வல்ல அல்லாஹ் வழங்கி அருள் புரிவானாக.
அவரது பிரிவால் துயருறும் மனைவி, பிள்ளைகள் மற்றும் குடும்பத்தார் அனைவருக்கும் மீதும் அல்லாஹ்வின் சாந்தி உண்டாகட்டும்.