மீட்டர் பொருத்துவது அடுத்த மாதம் முதல் கட்டாயமாகிறது




பயணிகள் முச்சக்கர வண்டிகளுக்கு கட்டண அறவீட்டு மீட்டர் பொருத்துவது அடுத்த மாதம் முதல் கட்டாய நடைமுறைக்கு கொண்டு வர தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வீதிப் பாதுகாப்பு சம்பந்தமான தேசிய சபை கூறியுள்ளது. 

குறித்த சட்டம் அடுத்த மாதம் இரண்டாம் வாரம் முதல் அமுலுக்கு கொண்டு வரப்படும் என்று வீதிப் பாதுகாப்பு சம்பந்தமான தேசிய சபையின் தலைவர் சிசிர கோதாகொட கூறினார். 

மீட்டர் பொருத்துவதற்காக சாரதிகளுக்கு நீண்ட காலம் அவகாசம் வழங்கப்பட்டதாகவும், வழங்கப்பட்டிருந்த சலுகைக் காலத்தை மேலும் நீடிக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். 

இந்த சட்டத்தை மீறும் முச்சக்கர வண்டி சாரதிகளை கைது செய்வதற்கு அல்லது அபராதம் விதிப்பதற்கு பொலிஸாருக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருப்பதாக வீதிப் பாதுகாப்பு சம்பந்தமான தேசிய சபையின் தலைவர் சிசிர கோதாகொட கூறினார். 

அத்துடன் முச்சக்கர வண்டிகளுக்கு கட்டண அறவீட்டு மீட்டர் பொருத்துவது தவிர பயணிகளுக்கு பற்றுச்சீட்டு வழங்கும் சட்டமும் நடைமுறைக்கு வருகிறது.