அய்யூப் அஸ்மீனின் கொடும்பாவி இரண்டாவது முறையாகவும் எரிப்பு




பாறுக் ஷிஹான்-

வடக்கு மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மீனின் கொடும்பாவி  இரண்டாவது முறையாகவும் யாழ்ப்பாண முஸ்லீம் மக்களினால் வீதியில் இழுத்து செல்லப்பட்டு எரியூட்டப்பட்டுள்ளது.

இன்றைய தினம்(7) மானிப்பாய் வீதியில் அமைந்துள்ள பெரிய முஹீதீன் ஜும்மா பள்ளிவாலில் இடம்பெற்ற தொழுகையின் பின்னர் ஒன்று கூடிய முஸ்லீம்கள் குறித்த மாகாண சபை உறுப்பினர் அண்மைக்காலமாக யாழ் முஸ்லீம் மக்கள் தொடர்பாக தெரிவித்து வரும் கருத்துக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இக்கொடும்பாவி எரிப்பில் ஈடுபட்டனர்.

இதன் போது இப்போராட்டத்தில் பங்கு பற்றிய மக்கள் வடக்கு மாகாண சபை உறுப்பினரனின் பதவிக்காலம் அடுத்த மாதம் நிறைவடைவதை இட்டு மீண்டும் தனக்கான அரசியலை மேற்கொள்ள வட பகுதி முஸ்லீம் மக்கள் குறித்து  முன்னுக்கு பின்னாக முரணான கருத்துக்களை நேரடியாகவும் ஊடகங்கள் வாயிலாகவும் பரப்பி வருவதாக குற்றம் சாட்டினர்.

எனவே தான் மாகாண சபை உறுப்பினர் இவ்விடயங்களில் இருந்து தவிர்ந்து கொள்ளுமாறு இப்போராட்டத்தில் கேட்டுக்கொண்டனர்.