சமகால ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நிலைப்பாடு குறித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாராட்டு தெரிவித்துள்ளார்.
2020 ஆம் ஆண்டுக்கு முன்னர் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட மாட்டாது என ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
நிவித்திகலயில் நேற்று நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கூட்டம் ஒன்றின் போது ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.
இது குறித்து மஹிந்த கருத்து வெளியிடுகையில்,
எனது பதவிக் காலம் முடியும் முன்னர் தேர்தலுக்கு அழைப்பு விடுத்து பிழை செய்து விட்டேன். எனினும் மைத்திரி புத்திசாலித்தனமாக செயற்படுகிறார்.
என்னைப் போன்று அல்லாமல் பதவிக் காலம் முடியும் வரையில் ஜனாதிபதி தேர்தலை நடத்தப் போவதில்லை என அறிவித்துள்ளார். நான் செய்த தவறை அவர் செய்யவில்லை என மஹிந்த குறிப்பிட்டுள்ளார்.
நேற்று நடைபெற்ற கட்சி கூட்டத்தின் போது, விரைவில் ஜனாதிபதி தேர்தலை நடத்தப் போவதாக சில தரப்பினர் மக்கள் மத்தியில் பிழையான தகவல்களை வெளியிட்டு வருகின்றனர். எவ்வாறான நிலையிலும் உரிய காலத்திற்கு முன்னர் ஜனாதிபதி தேர்தல் நடைபெற மாட்டாது என ஜனாதிபதி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment
Post a Comment