(க.கிஷாந்தன்)
மலையகத்தில் நேசிக்கின்ற பூஜிக்கின்ற புனித இடங்களில் சிவனொளிபாதமலை மிகவும் பிரசித்தி இடமாக இருந்துள்ளது. இது ஒரு மதத்திற்கோ அல்லது ஒரு இனத்திற்கு மாத்திரம் சொந்தமானதல்ல. இதனை இந்துக்கள் சிவனொளிமலையாகவும், பௌத்தர்கள் ஸ்ரீ பாதமாகவும், முஸ்லிம்கள் ஆதம் மலையாகவும், கிறிஸத்தவர்கள் எடம்ஸ்பிக் என்றும் நான்கு மதத்தவர்களும் பூஜிக்கக்கூடிய ஒரு புண்ணிய இடமாக சிவனொளிபாதமலை காணப்படுகின்றன.
இந்த புண்ணிய ஸ்தானத்திலே பௌத்த பெருமானின் சிலைகள் வழிபாடுகள் கூடுதலாக இருந்தாலும் கூட யாரும் இந்து மதத்தினை ஒதுக்கி வைக்கக்கூடாது என்ற எண்ணம் எம் எல்லாருக்கும் இருக்கின்றன. சில நேரங்களில் எமக்குள் பிரச்சினைகள் ஏற்படாலம் அதனை நாம் மதத்திற்கு மதம் மோதி இனத்திற்கு இனம் மோதி தீர்வு காண முடியாது.
அதற்கு பதிலாக இந்த இடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவலிங்கத்தினை வழிப்பாடு செய்வீர்களேயானால் இந்த இடத்தில் சிவ வழிபாடும் அதிகரிக்கும் என கல்வி இராஜாங்க அமைச்சர் வே.ராதாகிருஸ்ணன் தெரிவித்தார்.
சிவனொளிபாத மலையின் அடிவாரத்தில் அமைக்கப்பட்டுள்ள சிவ ஆலயத்தில் சிவலிங்கம் பிரதிஸ்ட்டை செய்யும் நிகழ்வு 09.09.2018 அன்று அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
நாம் எப்போதும் உயரத்தில் இருக்க வேண்டும் என்று நினைக்கவும் கூடாது. அதே நேரம் நாம் தாழ்ந்து வாழ வேண்டிய அவசியமில்லை. இன்று உலகில் பல நாடுகளில் சிவ வழிபாடுகள் மிகவும் பிரசித்தி பெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன. இதன் மூலம் இந்துக்கள் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் என்ற எண்ணம் எம்மை ஆறுதல் படுத்துகின்றன. அண்மையில் கூட நடைபெற்ற நல்லூர் கந்தன் ஆலயத்தின் விழாவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டிருந்திருந்தனர். எனவே மத நம்பிக்கையுடன் வழபடும் போது எமக்கு எல்லாம் கிடைத்து விடும் என்றார்.
சிவனொளிபாதமலை என்ற பெயரினை அண்மையில் கௌத்தம ஸ்ரீ பாதம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டதன் காரணமாக ஏனைய மதத்தர்கள் மத்தியில் பல்வேறு கேள்விகளையும் அச்சத்தினையும் ஏற்படுத்தின. இது ஒரு இன வாதத்தினை தூண்டும் செயலாக எதிர்காலத்தில் அமைந்து விடும் என்ற எண்ணமும் அணைவரின் மத்தியிலும் ஏற்பட்ட நிலையிலேயே 09.09.2018 அன்று சிவலிங்கம் பிரதிஸ்ட்டை செய்யப்பட்டன.
விநாயகர் வழிபாடு பாலபிசேகம், நீராபிசேகம், குடமுழக்கு பூஜை ஆகிய இடம்பெற்று நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் நல்லாசி வேண்டி சிவபிரார்த்தனையும் இடம்பெற்றன. இந்நிகழ்வு அனைத்து இன மக்களின் பங்களிப்புடன் சிறப்பாக நடைபெற்றன.
பூஜை வழிபாடுகளை மஸ்கெலியா ஸ்ரீ சண்முகநாத ஆலயத்தின் பிரதம குரு சிவஸ்ரீ சி.சிவசங்கர் தலைமையில் நடைபெற்றன.
இந்நிகழ்வின் போது மலையகத்தில் மேலும் பல ஆலயங்களுக்கு பிரதிஸ்டை செய்வதற்காக சிவலிங்கங்கள் கையளிக்கப்பட்டன.
இந்நிகழ்வுக்கு மத்திய மாகாணசபை உறுப்பினர் ஆர்.ராஜராம், உலக சைவ திருச்சபையின் தலைவர் விபுலாநந்தர் உட்பட பக்த அடியாரத்கள் கலந்து கொண்டனர்.

Post a Comment
Post a Comment