மட்டக்களப்பு சிறைச்சாலை கூரை மீது ஏறி கைதி ஒருவர் தன்னை விடுதலை செய்யக்கோரி இன்று மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்.
திருகோணலையைச் சேர்ந்த 21 வயதுடைய யோகராசா லக்ஷான் என்ற கைதி வாகரை பிரதேசத்தில் 15 வயது சிறுமியை பலாத்தகாரம் செய்தமை மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டு அவருக்கு 6 மாதகால சிறைத்தண்டனை வழங்கப்பட்டு மட்டக்களப்பு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் குறித்த கைதி தன்னை பிணையில் விடுவிக்கவேண்டும் என கோரி இன்று மாலை 4 மணியளவில் சிறைச்சாலை கூரை மீது ஏறி தன்னை தானே காயப்படுத்திக் கொண்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றார்.
இதனையடுத்து அவரை கூரையிலிருந்து பாதுகாப்பாக இறக்குவதற்கு சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் பொலிஸார் ஈடுபட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment
Post a Comment