சந்திப்பு




( அப்துல்சலாம் யாசீம்) 

மூதூர் பிரதேச செயலாளர் தாஹிர் மற்றும் மூதூர் பிரதேச முன்னாள் இளைஞர் தவிசாளரும் ஊடகவியலாளருமான இஞ்ஜினியர் இஹ்ஸான் ஜவாஸன் ஆகியோருக்கும் இடையிலான சந்திப்பு இன்று தோப்பூர் உப-பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில் மிக நீண்டகாலமாக தோப்பூர் பிரதேச மீனவர்களால் பாவிக்கப்படுகின்ற தோப்பூர்-உல்லைகழி கடற்கரைக்கு அருகே உள்ள மீனவர்களுக்குரிய காணியை சட்டரீதியாக உறுதிப்படுத்தி ஆவணப்படுத்தி தருமாறு இஹ்ஸான் ஜவாஸன் வினவினார்.

இதை தொடர்ந்து பிரதேச செயலாளர் தாஹீர், இஞ்ஜினியர் இஹ்ஸான் ஜவாஸன், காணி உத்தியோகத்தர் ஆகியோருக்கு இடையிலான மேலதிக கலந்துரையாடல் இன்று செப்டம்பர்-28 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மூதூர் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

பிரதேச செயலாளரின் அனுமதியுடன்  சேர்ஃப்-லங்கா நிறுவனத்தின் ஸ்தாபகரும் நிறைவேற்று பணிப்பாளருமான இஞ்சினியர் இஹ்ஸான் ஜவாஸன் அவர்களின் முயற்சியின் மூலம் மீனவர்களுக்கான  சில நிலையான அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மிக விரைவாக ஆரம்பிக்கப்படவுள்ளன.