கப்பல் துறையில் கையளிப்பு




( அப்துல்சலாம் யாசீம்)

திருகோணமலை கப்பல் துறை பகுதியில் வீடமைப்பு அதிகார சபையினால் நிர்மாணிக்கப்பட்ட  வீடுகளை பொதுமக்களுக்கு கையளிக்கும் நிகழ்வு  இன்று (09)  வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாசவினால் பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டது.
 
திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட  பகுதியில் தமிழ் முஸ்லிம் சிங்கள இனங்களைச் சேர்ந்த 30 பேருக்கு இந்த வீடுகள் கையளிக்கப்பட்டது. 

வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சினால்  நூற்றி 19 ஆவது திட்டத்திற்கு அமைவாக இந்த சஹஐீவனபு  எனும் பெயர் சூட்டப்பட்டு இன்றைய தினம் வீடமைப்பு அதிகார சபையின் அனுசரணையுடனும் வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர்  சஜித் பிரேமதாசவினால் மக்களிடம் வழங்கி வைக்கப்பட்டது 

இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான அப்துல்லா மஹ்ரூப், இம்ரான் மகரூப்,  மற்றும் கே.துடெ்ணசிங்கம்.எம்.எஸ். தவ்பீக் ஆகியோர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.