சம்மாந்துறை பொலிஸ் நிலைய வீதியைச் சேர்ந்த முஹம்மத் நௌசாத்(30 வயது)விபத்தில் நேற்று நள்ளிரவு உயிரிழந்தார்.
இவர் சென்ற மோட்டார் சைக்கிள் வாகனம், வேகக் கட்டுப்பாட்டை மீறியது. மரத்தில் மோதியதால்,கடுங்காயங்களுக்குள்ளான இவர், அக்கரைப்பற்று ஆதார வைத்தியாசாலையில், மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் கண்காணிக்கப்பட்டும் வந்தார். சிகிச்சை பலனின்றி இவர் நேற்று நள்ளிரவு உயிரிழந்தார்.
இவர், கடல்கடந்த நாட்டில், தொழில் புரிந்தவர். இலங்கைக்கு விஜயம் செய்து,இன்னும் இரண்டு வாரத்தில், திருமணம் நடப்பதற்கு திட்டமிடப்பட்டு வந்ததாகவும் அவரது தந்தை தெரிவித்துள்ளார்.
Post a Comment
Post a Comment