மாவனல்லை யுனைடட் விளையாட்டுக் கழகம் அரை இறுதிக்கு தெரிவு




பிரீமியர் லீக் பிரிவு II மாவனல்லை யுனைடட் விளையாட்டுக் கழகம் அரை இறுதிக்கு தெரிவு

பிரீமியர் லீக் பிரிவு II கால் இறுதிப் போட்டி மாவனல்லை யுனைடட் விளையாட்டுக் கழகம் மற்றும் ஹட்டன் யங் மேட்ஸ் விளையாட்டுக் கழகம் இடையே நேற்று ஞாயிற்றுக்கிழமை ஹட்டனில் நகரில் நடைபெற்றது.

குறித்த போட்டியில் ஹட்டன் யங் மேட்ஸ் விளையாட்டுக் கழகத்தை 6-1 என்ற கோல்கள் கணக்கில் இலகுவாக மாவனல்லை யுனைடட் விளையாட்டுக் கழகம் வெற்றி கொண்டு அரை இறுதிக்கு தகுதி பெற்றது.

இந்தப் போட்டியின்போது ஷிபான் 3 கோல்களையும் சல்மான் 2 கோல்களையும், நாசிக் 1 கோல் என யுனைடட் அணிக்காக தனது பெற்றுக் கொடுத்தமை குறிப்பிடத்தக்கது.