பாறுக் ஷிஹான்
யாழ்ப்பாணம் காங்கேசந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியிலிருந்து பழைய இரும்புகளை சேர்க்கும் வாகனத்துடன் வெடிக்காத துப்பாக்கி ரவைகளை கடத்தியதாக மூன்று இளைஞர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.
நேற்று(4) இரவு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து குறித்த வாகனத்தை ஊறணி தையிட்டி பகுதியில் இடைமறித்து சோதனை மேற்கொண்டனர்.
இச்சோதனை நடவடிக்கையின் போது வெடிக்காத 12 .5 மீமீ கலிபர் விமான எதிர்ப்பு துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் 200 தோட்டாக்களை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் பழைய இரும்பு சேகரிக்கும் இளைஞர்கள் மூவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
கைது செய்யப்பட்டவர்கள் வெடிக்காத குறித்த தோட்டாக்களை காங்கேசந்துறை பகுதியில் இருப்பவர்களிடம் இருந்து 1தோட்டா 5ரூபா படி வாங்கி சென்று அதில் இருக்கும் பித்தளைகளை 600க்கும் அதிகமான விலைக்கு விற்பதாகவும் அதில் உள்ள மருந்துகளை வேறு தேவைக்கு பயன்படுத்துவதாகவும் பொலிஸ் விசாரணையின் போது தெரிவித்துள்ளனர் .
இவர்களிர் 38 34 வயதுடைய இருவர் ஐந்துசந்தியை சேர்ந்தவர்கள் என்றும் 28வயதுடைய ஒருவர் மானிப்பாயை சேர்ந்தவர் என்றும் காங்கேசந்துறை பொலிசார் தெரிவி்த்தனர்
Post a Comment
Post a Comment