சாம் குர்ரான்தான் எங்களை அதிகம் காயப்படுத்தி விட்டார்- ரவி ஷாஸ்திரி




இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 1-4 என இழந்தது. முதல் டெஸ்டில் இந்தியா 31 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த டெஸ்டில் 20 வயதே ஆன சாம் குர்ரான் சிறப்பாக பந்து வீசியும், விக்கெட்டை கைப்பற்றியும் இந்திய தோல்விக்கு காரணமானார்.

சவுத்தாம்ப்டன் டெஸ்டில் இந்தியா 60 ரன்னில் வெற்றியை பறிகொடுத்தது. இந்த டெஸ்டிலும் முக்கியமான கட்டத்தில் ரன்கள் குவித்தும், விராட் கோலியின் விக்கெட்டை கைப்பற்றியும் இந்தியாவின் தோல்விக்கு காரணமாக இருந்தார்.

இங்கிலாந்து அணிக்கான தொடர் நாயகன் விருதை பெற்ற சாம் குர்ரான், இங்கிலாந்து அணியை விட அதிக அளவில் எங்களை காயப்படுத்தி விட்டார் என்று ரவி ஷாஸ்திரி கூறியுள்ளார்.



இதுகுறித்து ரவி ஷாஸ்திரி கூறுகையில் ‘‘நாங்கள் மிகவும் மோசமாக தோல்வியடைந்தோம் என்று நான் கட்டாயம் கூறமாட்டேன். ஆனால் நாங்கள் போராடினோம். இங்கிலாந்துக்கான தொடர் நாயகன் விருதை தேர்வு செய்ய எங்களிடம் (நான் மற்றும் விராட் கோலி) கேட்டுக்கொண்டார்கள்.

இருவருமே சாம் குர்ரானை தேர்வு செய்தோம். இங்கிலாந்தை விட குர்ரான்தான் எங்களை அதிக அளவில் காயப்படுத்திவிட்டார்’’ என்றார்.