இந்திய பாராளுமன்றத்தின் விஷேட அழைப்பின் பெயரில் இந்தியாவிற்கு சென்றுள்ள சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையிலான குழுவினர் இந்திய பிரதமர் நரேந்திர மோடியினை சந்தித்துள்ளனர்.
இதன்போது இந்திய பிரதமர் மற்றும் இலங்கை சபாநாயகருக்கு இடையில் சுமார் 45 நிமிடம் நீண்ட இரு தரப்பு கலந்துரையாடல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
எரிபொருள் விலை அதிகரிப்பை அடுத்து அங்கு ஏற்பட்டுள்ள ஆர்ப்பாட்ட நிலமையின் போதும் இலங்கை தூதுக்குழுவிற்காக நேரம் ஒதுக்கியமை தொடர்பில் இந்திய ஊடகங்கள் விஷேட கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன், அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, ரவூப் ஹக்கீம், கயந்த கருணாதிலக, மனோ கணேசன் ஆகியோருடன் டக்லஸ் தேவானந்தா, விஜித ஹேரத், பாராளுமன்ற பொது செயலாளர் தம்மிக தசாநாயக்க ஆகியோரும் இவ்வாறு இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ளனர்.

Post a Comment
Post a Comment