சில் துணி விநியோக விவகாரம் மேன்முறையீட்டை விசாரிக்க திகதி




சில் துணிகளை விநியோகம் செய்த சம்பவம் தொடர்பில் சிறைத்தண்டனை பெற்றுள்ள முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் அனுஷ பெல்பிட ஆகியோரின் மேன்முறையீட்டு மனுவை விசாரணைக்கு எடுக்க நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. 

குறித்த வழக்கை எதிர்வரும் மாதம் 10ம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுக்க மேன் முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்ததாக அத தெரண நீதிமன்ற செய்தியாளர் கூறினார். 

அந்த மனு இன்று அழைக்கப்பட்ட போது வழக்குடன் தொடர்புடைய ஆவணங்கள் பல தமக்கு இதுவரை கிடைக்கவில்லை என்றும் அவற்றை வழங்க சட்டமா அதிபருக்கு உத்தரவிடுமாறு பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணியால் நீதிமன்றில் கோரிக்கை விடுக்கப்பட்டது. 

அந்தக் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், அந்த ஆவணங்களை வழங்குமாறு சட்டமா அதிபருக்கு உத்தரவிட்டது. 

2015ம் ஆண்டு தொலைத் தொடர்பு ஆணைக்குழுவுக்கு சொந்தமான 600 மில்லியன் ரூபாவை பயன்படுத்தி சில் துணிகளை விநியோகம் செய்த சம்பவம் தொடர்பில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட இருவருக்கும் மூன்று வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.