வாகன நெரிசலால் பெரும் நெருடல்




இலங்கையின் வீதிகளில் ஏற்படும் வாகன நெரிசலால் பெரும் நஷ்டம் ஏற்படுவதாக நிபுணர் ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

இத்தகைய நெரிசலால் ஏற்படும் இழப்பு வருடாந்தம் 360 பில்லியன் ரூபாவை எட்டுவதாக போக்குவரத்து பட்டய நிறுவகத்தின் தலைவி கயனி டீ அல்விஸ் தெரிவித்துள்ளார். 

இலங்கை தொழில்துறை சார்ந்தோர் சங்கத்தின் 31 ஆவது வருடாந்த மாநாட்டில் அவர் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். 

இந்த மாநாடு நேற்று கொழும்பில் உள்ள தனியார் ஹோட்டலில் இடம்பெற்றது. 

(அரசாங்க தகவல் திணைக்களம்)