ஜனாதிபதியின் காட்டமான அறிக்கைய அடுத்து,முந்திரி பருப்பு வழங்குனரை மாற்ற தீர்மானம்




தமது நிறுவனத்திற்கான முந்திரி பருப்பு வழங்குனரை மாற்றுவதற்கு தீர்மானம் எடுத்திருப்பதாக ஶ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனம் கூறியுள்ளது. 

கடந்த வாரம் நேபாளில் இருந்து இந்தியா ஊடாக ஶ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்றில் இலங்கை வந்த போது தனக்கு வழங்கப்பட்ட முந்திரி பருப்பை நாய் கூட உண்ண மாட்டாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியிருந்தார். 

இதனையடுத்தே ஶ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.