எப்படி இருந்த பாகிஸ்தான் இப்படி ஆன பரிதாபம்




ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்று வருகிறது. ஒருநாள் கிரிக்கெட்டில் பாகிஸ்தான், இந்தியா, இலங்கை அணிகள் நீண்ட காலமாக ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. வங்காள தேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் வளர்ந்து வரும் அணிகள் என்பதால் அவ்வப்போது பெரிய அணிகளுக்கு அதிர்ச்சி அளிக்கும்.

நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பாகிஸ்தானை வங்காள தேசம் 37 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. இதன்மூலம் 3-வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

இந்தியா - பாகிஸ்தான், ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையிலான ஆட்டம் எவ்வளவு முக்கியமானதாக கருதப்படுகிறதோ, அதேபோல் பாகிஸ்தான் - வங்காள தேச அணிகள் இடையிலான ஆட்டம் முக்கியமானதாக கருதப்படுகிறது.

ஆரம்ப கால கட்டத்தில் வங்காள தேசத்திற்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் எளிதில் வெற்றி பெற்று விடும். தற்போது பாகிஸ்தான் கடும் சவாலை சந்திக்க வேண்டியுள்ளது.



1986-ம் ஆண்டு முதல் 2014 வரை பாகிஸ்தான் - வங்காள தேசம் இடையில் 32 போட்டிகள் நடைபெற்றன. இதில் 25 போட்டிகளில்  தொடர்ச்சியாக வெற்றி பெற்ற பாகிஸ்தான் 31 வெற்றிகளை ருசித்தது. ஒரு போட்டியில் மட்டுமே தோல்வியை சந்திதது.

ஆனால் 2015-க்குப் பிறகு பாகிஸ்தான் நிலைமைய தலைகீழாக மாறியுள்ளது. 2015 முதல் நேற்று வரை நான்கு போட்டிகளில் மோதியுள்ளன. இந்த நான்கிலும் பாகிஸ்தான் தோல்வியை சந்தித்துள்ளது.