நாவல் சோலையில். மண்வெட்டியால் அடித்துக் கொன்றவறுக்கு விளக்கமறியல்




(அப்துல்சலாம் யாசிம்) 

திருகோணமலை குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவல் சோலை பகுதியில் மண்வெட்டியால் அடித்து கொலை செய்த சந்தேகநபரை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு இன்று (08) திருகோணமலை நீதிமன்ற மேலதிக  நீதிபதி சமிலா குமாரி ரத்னாயக்க உத்தரவிட்டுள்ளார்.

இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்  குச்சவெளி நாவற்சோலை பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான கருணாஸ் ரமேஷ் (வயது 26) எனவும் குச்சவெளி பொலிஸார் தெரிவித்தனர். 

சம்பவம் குறித்து தெரியவருவதாவது கும்புறுப்பிட்டி நாவற் சோலை பகுதியில் மரண வீடு ஒன்றில் மதுபோதையில் உட்கார்ந்திருந்த கருணதாஸ் ரமேஷ் என்பவர்  வேலைக்கு சென்று துவிச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 52 வயதுடைய நடராசா தயாளன் என்பவரை அழைத்தபோது அவர் துவிச்சக்கர வண்டியை நிறுத்தாமல் சென்றுள்ளார், 

மது போதையில் இருந்த கருணதாஸ் ரமேஷ் துவிச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்த நடராசா தயாளன் நிறுத்தாமல் சென்றதால்
கோபம் கொண்டு மோட்டார் சைக்கிளில் இருந்த தலைக்கவசத்தினால் அடித்துள்ளார், 

இதனையடுத்து விழுந்த  அவரை மீண்டும் மண்வெட்டியால் தலையில் தாக்கியதாக  ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது, 

அதனையடுத்து மரண வீட்டில் இருந்தவர்கள் குச்சவெளி பிரதேச வைத்தியசாலையில் உயிரிழந்தவரை ஒப்படைத்த பின்னர் சட்ட வைத்திய அறிக்கைக்காக  திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர், 

இதேவேளை இன்றைய தினம் சட்ட வைத்திய அதிகாரியின் பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் குச்சவெளி பொலிஸார் தெரிவித்தனர், 

உயிரிழந்தவரின் சடலம் அவரது வீட்டில்  மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளதாகவும் நாளைய தினம் நல்லடக்கம் செய்யப்பட உள்ளதாகவும் பிரதேச மக்கள் தெரிவித்தனர், 

இதுதொடர்பாக குச்சவெளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்தனர்