மாணிக்கவத்தையில் கொள்ளை










வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டவளை மாணிக்கவத்தை எனும் தனியார் தோட்டத்தின் உரிமையாளர் மற்றும் அவரின் மனைவி ஆகியோரின் கை மற்றும் கால்களை கட்டி வைத்து விட்டு இனந்தெரியாத குழுவினர் ஒன்று குறித்த உரிமையாளரின் விடுதிக்குள் புகுந்து விடுதியில் இருந்த தங்க ஆபரனங்கள் மற்றும் பணம் என்பவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளதாக வட்டவளை பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்யப்பட்டுள்ளதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் 13.09.2018 அன்று அதிகாலை வேளையில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
குறித்த மாணிக்கவத்தை தோட்டத்தின் உரிமையாளரும், அவரின் மனைவியும் நித்திரையில் இருந்த சமயம் இனந் தெரியாத கொள்ளை குழுவினர்கள் தமது முகங்களை மூடியவாறு உள் நுழைந்து இருவரின் கை மற்றும் கால்களை கட்டி வைத்து விட்டு மேற்படி தங்க ஆபரணங்களையும், பணத்தையும் கொள்ளையடித்து தப்பித்து சென்றுள்ளதாக வட்டவளை பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலம் அளிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது வரையிலும் கொள்ளையடிக்கபட்ட தங்க ஆபரணங்கள் மற்றும் பணம் தொடர்பான பெருமதி தொடர்பில் பொலிஸார் அறிவிக்கவில்லை. இதேவேளை சம்பவ இடத்திற்கு சென்ற வட்டவளை பொலிஸார் விசாரனைகளை ஆரம்பித்துள்ளதோடு, கைரேகை பிரிவினரை அழைத்து விசாரனைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் இதுவரையிலும் எவரும் கைது செய்யபடவில்லையென தெரிவித்த வட்டவளை பொலிஸார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.