பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை மற்றும் ஹர்த்தால் அனுஷ்டிக்க தூண்டியமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் பேரில் தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் கணபதிப்பிள்ளை மோகன் ஞாயிற்றுக்கிழமை (09) ஏறாவூர்ப் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு பெரிய புல்லுமலையில் அமைக்கப்படும் போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர்த் தொழிற்சாலையை தடைசெய்யுமாறு கோரி கடந்த வெள்ளிக்கிழமை (07) ஹர்த்தால் அனுஷ்டிக்குமாறு தமிழ் உணர்வாளர் அமைப்பு அழைப்பு விடுத்திருந்தது.
இந்த அழைப்பின் பேரில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது. அன்றைய தினம் போக்குவரத்தில் ஈடுபட்பட இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்துகள் கல் வீச்சு தாக்குதலுக்குள்ளாகியதுடன் வீதிகளில் டயர்கள் எரிக்கப்பட்டன. இச்சம்பவங்கள் தொடர்பாக சிலர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு விசாரணையின் பின் விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை மற்றும் ஹர்த்தால் அனுஷ்டிக்க தூண்டியமை ஆகிய குற்ச்சாட்டுக்களின் பேரில் தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் கணபதிப்பிள்ளைகைது செய்யப்பட்டுள்னார். இவருடன் இணைந்து செய்பட்டவர்களை கைதுசெய்ய நடவடிக்கையெடுப்பட்டுள்ளதாக ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர்.
Post a Comment
Post a Comment