#SarithaSBalan
#KerelaFloods
அண்மையில், இந்தியாவில் கேரள மாநிலத்தில் பெரு வெள்ளம் ஏற்பட்டது. அதில் பலர் உயிர் நீத்தனர்,சிலர் உடமைகளையும் இழந்தனர். சிலர் வெள்ளத்தில் அடிபட்டுப் போயிருந்து பின்பு மீட்கப்பட்டனர். ஆனால், கடந்த 15ம் திகதி முதல்,இடுக்கிப் பிரதேசத்தில், காணாமல் போன முஹம்மத் மம்முட்டி, இவரது மனைவி அஸ்மா,இவர்களது புதல்வர் 17 வயது மாணவர் முப்சல் ஆகியோரை இன்னும் காணவில்லை என்பதாக அறிவிக்கப்படுகின்றது.
”மீட்கப்பட்ட ஓர் உடலம் உள்ளது.ஆனால்,அது தனது சகோதரி அஸ்மாவின் உடல்தானா என, உடற்கூற்றாய்வின் மூலம் உறுதி செய்யப்படவில்லை” என்கின்றார், அஸ்மாவின் சகோதரன். ஏனையோருக்கு என்ன நடந்தது என்றே தெரியவில்லை என்கின்றார்,கண்ணீர் மல்க.
Post a Comment
Post a Comment