ஹென்போல்ட் தோட்டத்தில்




(க.கிஷாந்தன்)

இந்திய அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் ஊடாக லிந்துலை ஹென்போல்ட் தோட்டத்தில் நிர்மாணிக்கப்படவிருக்கும் 50 வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு 08.09.2018 அன்று இடம்பெற்றது.

மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சரும் தொழிலாளர் தேசிய முன்னனியின் தலைவருமாகிய பழனி திகாம்பரம் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இந்திய உயர்ஸ்தானிகத்தின் அதிகாரிகள், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம். திலகராஜ், மத்திய மாகாண சபை உறுப்பினர்களான சோ.ஸ்ரீதரன், எம்.உதயகுமார், சிங் பொன்னையா, சரஸ்வதி சிவகுரு மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.