கருங்கல் ஒன்றில் சிக்குண்டு, உ,யிரிழப்பு




(க.கிஷாந்தன்)

திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை கொமர்சல் பகுதியில் 12.09.2018 அன்று மாலை 4.00 மணியளவில் கூலி வேளையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் கருங்கல் ஒன்றில் சிக்குண்டு பரிதாபமான முறையில் உரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் கினிகத்தேனை பகுதியை வசிப்பிடமாக கொண்ட சுமார் 33 வயது மதிக்கதக்கவர் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

குறித்த நபர் கல் உடைக்கும் தொழிலில் ஈடுபடுபவர் என்றும், இவர் கல் உடைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது அவர் வேலை செய்து கொண்டிருந்த இடத்திற்கு மலைப்பபகுதியில் குவிக்கப்பட்டிருந்த கற்கள் புரண்டுள்ளன.

இதில் பாரிய கல் ஒன்று புரண்டு வந்து குறித்த நபரின் மீது வீழ்ந்ததில் இவர் உயிரிழந்ததாக பொலிஸார் மேற்கொண்ட ஆரம்ப கட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளன.

உயிரிழந்தவரின் சடலம் கொட்டகலை மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திம்புள்ள பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்