அமெரிக்க ஓப்பன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியில், பெண்கள் ஒற்றையர் பிரிவில் செரீனா வில்லியம்ஸ் அதிர்ச்சி தோல்வியடைந்தார். இந்தப்போட்டியின் போது செரீனா போட்டி நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
செரீனா
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றாக அமெரிக்க ஓப்பன் டென்னிஸ் போட்டிக்ல் நியூயார்கில் நடைபெற்றது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இதில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் ஜப்பானின் நவோமி ஒசாகா மோதினர். இந்தப்போட்டியில்
6-2, 6-4 என்ற நேர்செட் கணக்கில் நவோமி வெற்றிப்பெற்று பட்டத்தைக் கைப்பற்றினார். இந்தப்போட்டியில் நடுவருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தால் செரீனா கண்ணீருடன் வெளியேறினார்.
நவோமிக்கு எதிரான முதல் செட்டை செரீனா 2-6 என்ற கணக்கில் இழந்தார். இரண்டாவது செட் ஆட்டத்தின் போது இருவரும் கடுமையாக போராடிக்கொண்டிருந்தனர். அப்போது செரீனா விளையாடும் போது அவரது பயிற்சியாளர் கைகளால் செய்கை செய்தார். இதனை போட்டி நடுவர் கார்லோஸ் ராமோஸ் கண்டித்தார். இவ்வாறு செய்வது போட்டி விதிமீறல் என எச்சரித்தார். நடுவரின் செயல்பாட்டால் அதிருப்தி அடைந்த செரீனா எனது பயிற்சியாளர் வெற்றி பெறு என செய்கை மட்டுமே காட்டினார் என்றார். இதனை போட்டி நடுவர் ஏற்கவில்லை. நான் ஏமாற்றி வெற்றி பெருவதற்கு பதில் தோற்றே விடுவேன் என்றார்.
தொடர்ந்து அதிருப்தியை வெளிப்படுத்திய செரீனா டென்னிஸ் பேட்டை தரையில் அடித்து தனது கோபத்தை வெளிப்படுத்தினார். தொடர்ந்து நடுவருக்கு எதிராக கடினமான வார்த்தைகளை பயன்படுத்தினார். நீ என்னுடைய புள்ளிகளை பறித்துக்கொண்டாய், நீ ஒரு ‘திருடன்’ என்று அழைத்தார். செரீனாவின் இந்த செயல்பாடுகள் அவருக்கு எதிராக அமைந்தது. போட்டி விதிமீறல்கள் காரணமாக அவரது புள்ளிகள் குறைக்கப்பட்டது. செரீனாவின் இந்த செயல்பாடுகளால் அமெரிக்க ஓப்பன் டென்னிஸ் போட்டி சர்ச்சையில் முடிந்தது.

Post a Comment
Post a Comment