(க.கிஷாந்தன்)
சிங்கபூரில் உள்ள கழிவுகளை இலங்கைக்கு கொண்டு வருவதாக எதிர்கட்சிகள் தெரிவிப்பதில் எந்தவித உண்மை தன்மையும் இல்லை என மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
கினிகத்தேனை நகரில் 90 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்படவுள்ள இரண்டு மாடிகளை கொண்ட நவீன முறையிலான புதிய பஸ் நிலையத்துக்கு மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க மற்றும் பல அரசியல் பிரமுகர்களால் 02.09.2018 அன்று காலை 10.00 மணியளவில் அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரை நிகழ்த்துகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
சிங்கபூரில் இருந்து எந்தவித இரசாயன கழிவுகளை இங்கு கொண்டுவர வேண்டிய அவசியம் இல்லை எனவும், எனவே அவ்வாறு தெரிவிக்கப்படுவது உண்மைக்கு புறம்பானதாகும்.
தான் மின்சக்தி அமைச்சராக செயற்பட்ட சந்தர்பத்தில் மலையக தோட்ட பகுதிகளுக்கு குறிப்பிடதக்களவு மின்சார வசதியை வழங்கியுள்ளேன். தற்போது தொழினுட்ப உலகத்தில் வாழும் நமக்கு அனைத்து தேவைகளையும் ஸ்மாட் கைதொலைபேசியூடாக செய்துக்கொள்ளகூடிய இயலுமை காணப்படுகின்றது. அதற்கமையவே பல்கலைக்கழகங்களிலும் புதியவகை அப்பை அறிமுகப்படுத்தியுள்ளோம்.
குறிப்பாக வங்கிதுறை தற்போது நவீனமயப்படுத்தப்பட்டுள்ளதுடன், வாடகைக்கு வாகனங்களை பெறுவதற்கும் இணையத்தின் மூலம் வாய்பேற்பட்டுள்ளது.
ஊடகங்களும் இந்த புதிய முறைமைக்கு மாறியுள்ளன. அதாவது செய்திகளை முகப்புத்தகத்தில் வெளியிடும் அளவுக்கு தொழினுட்பம் முன்னேறியுள்ளது.
எனவே அதற்கேற்றால் போல் எமது தேயிலை துறை, ஆடை தொழிற்துறை போன்ற துறைகளை அபிவிருத்தியடைய செய்ய வேண்டியது அவசியமாகும், ஏனென்றால் இந்த உலகத்தின் எதிர்காலம் எமது பிள்ளைகளில் கைகளிலே உள்ளது.
அதேபோல் இன்றை உலகில் பேஸ்புக், எப்பள், கூகுள், உள்ளிட்ட வியாபார துறைகளே, பாரிய இலாபமீட்டி பாரிய வளர்சியை கண்டுள்ளன.
ஆகவே இந்த புதிய தொழினுட்ப புறட்சியோடு முன்னோக்கி பயணிக்கவே எமது பிள்ளைகள் ஆயத்தப்பட வேண்டும், தற்போது எமது நாட்டில் நகரமயமாக்கலே பாரிய பிரச்சினையாக காணப்படுகின்றது.
இதற்கு வாகன அதிகரிப்பே முழு காரணம், சுதந்திரம் பெறும் போது ஐயாயிரம் வாகனங்களே இருந்தன. ஆனால் இன்று 75 ஆயிரத்திற்கும் அதிகமான வாகனங்கள் உள்ளன.
கொழும்பில் தற்போது 15 வீதமான காணிகள் போக்குவரத்துக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனாலும் பஸ் மற்றும் ரயில் போக்குவரத்துக்களுக்கு முக்கியதுவமளித்து செயற்பட வேண்டியுள்ளது.
எனவே எதிர்கால சந்ததியினருக்கு அரச போக்குவரத்தே அவசியப்பட போகின்றதே அன்றி தனியார் போக்குவரத்து பயனளிக்க போவது இல்லை.
எனவே புதிய தொழினுட்ப உலகத்திற்கு முகம் கொடுக்க எமது பிள்ளைகள் தயாராக வேண்டும் எனவும் அமைச்சர் மேலும் கூறினார்.
Post a Comment
Post a Comment