தரையிறங்கியது,எரிபொருளுக்காக




அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரிலிருந்து அபுதாபி நோக்கிப் பயணித்த, எடிஹெட் விமான சேவைக்குச் சொந்தமான, A – 380 எயார் பஸ்  விமானமானது, இன்று அதிகாலை எரிபொருள் நிரப்புவதற்காக, கட்டுநாயக்க விமானநிலையத்தில் தரையிறங்கியுள்ளது.
அதிகாலை 4.28 மணியளவில் கட்டுநாயக்கவில் தரையிறங்கிய குறித்த விமானத்தில், பயணிகள் உள்ளிட்ட 455 அலுவலகர்கள் பயணித்துள்ளனர்.
கட்டுநாயக்க விமானநிலையத்தில் 40,000 லீற்றர் எரிபொருளை நிரப்பிய குறித்த விமானம் 6.11 மணியளவில், கட்டுநாயக்கவிலிருந்து, அபுதாபி நோக்கி பயணித்துள்ளது.