ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிரான வழக்கு டிசம்பரில்




நீதிமன்றத்தை அவமதித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிரான வழக்கை டிசம்பர் மாதம் 10ம் திகதி முதல் விசாரணைக்கு எடுக்க உச்ச நீதிமன்றம் உள்ளது. 

இன்று இது தொடர்பான வழக்கு பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் உள்ளிட்ட மூன்று நீதியரசர்கள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. 

இதன்போது 14 நபர்களின் சாட்சியங்கள் மற்றும் வழக்கிற்கான 08 பொருட்களை சட்ட மா அதிபர் நீதிமன்றில் சமர்பித்தார். 

விடயங்களை கருத்திற் கொண்ட நீதிமன்றம் வழக்கை டிசம்பர் 10, 11 மற்றும் 12ம் திகதிகளில் தொடர்ந்து விசாரணை செய்ய உத்தரவிட்டது.