விரிவுரையாளர் கொலைக்கு நீதி கோரி




அப்துல்சலாம் யாசீம்
கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளராக பணியாற்றிய  போதநாயகி நடராஜாவின் மரணத்துக்கு நீதிக்கோரி,  இன்று (28) மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பல்கலைக்கழக வளாகத்துக்குள் இந்த கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெற்றது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் நடைபவனியாக சிறிது தூரம் சென்று போராட்டத்தில் ஈடுப்பட்டனர். 
விரிவுரையாளர் போதநாயகியின் மரணத்துக்கான காரணத்தை உடனடியாக கண்டறியுமாறு, சமூகத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளிலிருந்து பெண்களை பாதுகாக்கவேண்டுமெனவும்,  மக்கள் கோரிக்கை விடுத்தனர்.