பயங்கரவாத குற்றச்சாட்டில் அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்ட இலங்கை இளைஞர், விளையாட்டுத்துறை அமைச்சரான பைஸர் முஸ்தபாவின் மருமகன் என தெரிவிக்கப்படுகின்றது.
மொஹமட் நிசாம்தீன் எனும் 25 வயதுடைய இளைஞர் ஒருவரே அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் வைத்து கடந்த 30 ஆம் திகதி இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவருடைய மாணவர் விசா செப்டம்பர் மாதம் காலாவதியாக உள்ளதாகவும், சிட்னியிலுள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் பணியாற்றக் கூடியவர் என்றும் அவுஸ்திரேலியா ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பயங்கரவாத தாக்குதல்களுக்கான திட்டங்களைக் கொண்டுள்ளதாகவும், அது தொடர்பான ஆவணம் ஒன்று அவரிடம் இருந்துள்ளதாகவும் அந்த இளைஞர் மீது அவுஸ்திரேலிய பொலிஸார் குற்றம் சாட்டியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபருக்கு எதிராக பயங்கரவாத சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவருக்கு பிணை வழங்க அந்நாட்டு நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது
#UniversityOfNewSouthWales #kensigton
Post a Comment
Post a Comment