எதிர்ப்பு பேரணி ஆரம்பமானது




கூட்டு எதிர்க்கட்சியினர் ஒழுங்கு செய்துள்ள ´மக்கள் பலம் கொழும்புக்கு´ எதிர்ப்பு பேரணி ஆரம்பமாகியுள்ளது. 

இந்தப் பேரணியின் பிரதான கூட்டம் கொழும்பு கொழும்பு லேக் ஹவுஸ் சுற்றுவட்டத்தில் இடம்பெற உள்ளது. 

பின்னிணைப்பு 

பி.ப. 04.25 - கூட்டு எதிர்க்கட்சியினரின் ´மக்கள் பலம் கொழும்புக்கு´ எதிர்ப்பு பேரணியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோர் இணைந்து கொண்டுள்ளனர். 

இருவரும் சற்றுமுன்னர் கொழும்பு புறக்கோட்டை பகுதியில் வைத்து பேரணியுடன் இணைந்து கொண்டதாக அத தெரண செய்தியாளர் கூறினார். 

பி.ப. 4.00 - கூட்டு எதிர்க்கட்சியினரின் ´மக்கள் பலம் கொழும்புக்கு´ எதிர்ப்பு பேரணி காரணமாக கொழும்பு கோட்டைப் பகுதியில் பாரிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. 

இதற்கு சிறிது நேரத்திற்கு முன்னர் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ அந்த இடத்திற்கு வருகை தந்துள்ளார். 

பி.ப. 3.25 - தற்போது மருதானை, டார்லி வீதியில் இப்பான்வல சந்தியில் இருந்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பி.ப. 2.45 - மருதானையில் இருந்து புறக்கோட்டை நோக்கிய டெக்னிகல் சந்திப் பகுதியில் தற்போது கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் கூறியுள்ளார். 

கூட்டு எதிர்க்கட்சியினரின் ´மக்கள் பலம் கொழும்புக்கு´ எதிர்ப்பு பேரணி காரணமாகவே அப்பகுதியில் நெரிசல் ஏற்பட்டுள்ளது.