(க.கிஷாந்தன்)
கினிகத்தேனை நகரில் 90 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்படவுள்ள இரண்டு மாடிகளை கொண்ட நவீன முறையிலான புதிய பஸ் நிலையத்துக்கு மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க மற்றும் பல அரசியல் பிரமுகர்களால் 02.09.2018 அன்று காலை 10.00 மணியளவில் அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டுள்ளது.
மிக நீண்டகாலமாக கினிகத்தேனை நகரில் பஸ் தரிப்பு நிலையம் ஒன்று முறையாக இல்லாமல் இருந்தமை வழியுறுத்தப்பட்டு வந்துள்ளதையடுத்து, நகரின் அபிவிருத்தியை முன்னெடுக்கும் வகையில் இந்த பஸ் தரிப்பு நிலையத்தை புனர்நிர்மானம் செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு அதற்கான வேலைத்திட்டங்களை ஆரம்பிப்பதற்கு 02.09.2018 அன்று அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.
ஐக்கிய தேசிய கட்சியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.பியதாஸவின் அழைப்பின் பேரில் மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க இந்நிகழ்வில் கலந்து கொண்டு அடிக்கல்லை நாட்டி வைத்தார்.
அத்தோடு, மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம், ஐக்கிய தேசிய கட்சியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.பியதாஸ, மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க, அம்பகமுவ பிரதேச சபை தலைவர், உள்ளிட்ட அரச அதிகாரிகள் பொதுமக்களென பலர் கலந்துகொண்டனர்.
இவ்வாறு அமைக்கப்படும் நவீன பஸ் தரிப்பு நிலையத்தின் மேல் மாடியில் கடைத்தொகுதிகள் மற்றும் காரியாலயங்கள் அமைக்கப்படவுள்ளமை குறிப்பிடதக்கது.
Post a Comment
Post a Comment