ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தொடரில் பங்கேற்க அமெரிக்கா சென்றிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று நாடு திரும்பியுள்ள நிலையில், அரசியலில் பல அதிரடி முடிவுகளை எடுக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமைச்சரவை மாற்றம் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருக்கிறது.
மேலும் அந்த செய்தியில், நிதி அமைச்சின் செயலாளர் ஆர்.எச்.எஸ்.சமரதுங்க ஓய்வுபெறுவதால், அவரது பதவிக்கு ஜனாதிபதி மற்றொருவரை நியமிக்க உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமைச்சரவை மாற்றம் செய்யப்பட உள்ளதாகவும். அதில் முன்னாள் அமைச்சர்களான ரவி கருணாநாயக்க மற்றும் தயாசிறி ஜெயசேகர ஆகியோர் மீண்டும் அமைச்சரவையில் இடம்பிடிப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment
Post a Comment