கடந்த வாரம் நேபாளில் இருந்து இந்தியா ஊடாக ஶ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்றில் இலங்கை வந்த போது தனக்கு வழங்கப்பட்ட முந்திரி பருப்பை மனிதர்கள் அல்ல நாய்க்கும் உண்ண முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
யார் இவற்றை இறக்குமதி செய்ய அனுமதி வழங்குகிறார்கள் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
நேற்று (10) முற்பகல் ஹம்பாந்தோட்டை மாகம்புர ருகுணு சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற ஹம்பாந்தோட்டை விவசாய சமூகத்துடனான சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நாட்டில் உற்பத்தி செய்ய முடியுமான உணவுப் பொருட்களை கொள்ளை இலாபமீட்டுகின்றவர்களுக்கு தேவையான வகையில் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதை உடனடியாக நிறுத்தும் முறையான செயற்திட்டமொன்று குறித்து அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
ஜின் – நில்வளவ கங்கை திட்டங்கள் தொடர்பாக கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, இத்திட்டத்தில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் நிதி முறைகேடுகள் குறித்து தற்போதைய அரசாங்கத்தின் கீழ் மீண்டும் ஒரு விசாரணை இடம்பெறும் என்று தெரிவித்துள்ளார்.
ஜின் – நில்வளவ நீர்ப்பாசன திட்டத்தில் இடம்பெற்றுள்ள முறைக்கேடுகள் குறித்து இதுவரை இடம்பெற்ற விசாரணைகளின் தாமதம் மற்றும் மந்தகதியான நிலையினை கவனத்திற்கொண்டு இத்தீர்மானத்திற்கு வரவேண்டியுள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, எவ்வாறான போதும் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ள அரசாங்கத்தின் அனைவரும் தமது அரசியல் பெறுமானங்களை பாதுகாத்து செயற்படுத்த வேண்டும் என்று வெளிப்படையாக கூறுவதாக தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தறை மாவட்ட அபிவிருத்தியில் புதிய மாற்றத்தை கொண்டுவரும் இம்மாவட்ட விவசாய சமூகத்தின் எதிர்பார்ப்பாகவுள்ள நில்வளவ திட்டம் மிகவும் அவசியமான ஒன்று என்ற கொள்கையின் அடிப்படையில் அரசாங்கம் செயற்படுவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
விவசாயத் துறையில் எழுச்சி ஒன்றை ஏற்படுத்தி விவசாய பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு அரசாங்கம் முன்னெடுத்துள்ள விரிவான திட்டங்கள் குறித்தும் ஜனாதிபதி இதன்போது கருத்துத் தெரிவித்துள்ளார்.

Post a Comment
Post a Comment