பொலிஸார் மீது மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர்




மக்களுக்கு இடையில் பொலிஸார் மீதான விசுவாசம் இழந்துள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழு கூறியுள்ளது. 

பொலிஸாருக்கு எவராவது ஒரு நபர் தகவல் வழங்கியிருந்தால் அது சம்பந்தமாக திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் கும்பலுக்கு தகவல் கிடைத்து விடுகிறது என்று மக்கள் குற்றம் சுமத்துவதாக ஆணைக்குழு கூறியுள்ளது. 

பொதுமக்கள் மற்றும் புத்தி ஜீவிகளிடம் பொலிஸ் ஆணகை்குழு பெற்றுக் கொண்ட கருத்துக்கணிப்பில் இந்த விடயம் தெரிய வந்துள்ளதாக பொலிஸ் ஆணைக்குழுவின் ஊடக அதிகாரி பீ. லியனஆரச்சி கூறினார்.