கிழக்கு மாகாணப் பாடசாலைகளுக்கு நியமிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் நாளை (05) தங்களது, புதிய கடமையை பொறுப்பேற்றுக் கொள்ளவுள்ளதாக கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ. நிஸாம் இன்று (04) தெரிவித்தார்.
அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களிலுள்ள பாடசாலைகளுக்கு சுமார் 160 பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாசிரியர்கள் 14 நாட்களுக்குள் கடமை பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும் அவ்வாறு கடமை பொறுப்பேற்றகாதவர்களின் நியமனங்கள் இரத்தாகுமெனவும் தெரிவித்தார்.
Post a Comment
Post a Comment