ஆசியாவை மையப்படுத்தி எதிர்வரும் தசாப்தங்களில் புதிய உலகப் பொருளாதாரம் ஒன்றின் வகை மாதிரி உருவாகும் என்பதால், ஆசியான் அமைப்புக்கும் ஆசியப் பொருளாதாரத்தில் பெருஞ் செல்வாக்குடைய நாடுகளுக்கும் ஆசியாவின் புவியரசியல் அமைப்பு தொடர்பாக முக்கியமான கடமைப் பொறுப்பு காணப்படுவதாக இலங்கையின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டார்.
ஹெனொய் நகர ´ஆசியான்´ உலக பொருளாதார மாநாட்டில் இன்று (13) ´ஆசியாவின் புவியரசியல் அமைப்பு´ எனும் தலைப்பில் இடம்பெற்ற கலந்துரையாடல் அவையில் கலந்துகொண்ட விக்கிரமசிங்க, ஆசியப் பொருளாதாரத்தின் எதிர்காலம் இந்து பசுபிக் சமுத்திர சுதந்திர கப்பற் போக்குவரத்தின் மீதே தங்கியுள்ளது என மேலும் குறிப்பிட்டார்.
அதனால் பிராந்திய வல்லமை மிக்க நாடுகள், சமுத்திரத்தைப் பயன்படுத்துவோர், பிராந்திய சமுத்திரத்திற்கு அருகாமையிலுள்ள நாடுகள் மற்றும் அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து ஏற்றுக்கொள்ளப்பட்ட தரநிலைகளுக்கு அமைவாக சுதந்திர சமுத்திரக் கொள்கை ஒன்றைப் பின்பற்றுவதன் முக்கியத்துவத்தினையும் வலியுறுத்தினார்.
வியட்நாமின் பிரதிப் பிரதமர் மற்றும் வெளிநாட்டு அமைச்சர் பாம் பின் மின், தென் கொரிய வெளிநாட்டு அமைச்சர் கங் கியுங் வா, ஜப்பான் வெளிநாட்டு அமைச்சர் தரொ கொனொ மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தினதும் ஆசிய மூலோபாய ஆய்வு தொடர்பான சர்வதேச நிறுவனத்தினதும் சிரேஷ்ட ஆய்வாளர் கலாநிதி லுன் குக் இந்த கலந்துரையாடலின் போது அவையில் கருத்துக்களைத் தெரிவித்தனர்.
புதிய பொருளாதாரப் போக்குகளின் மத்தியில் ஆசியப் பிராந்தியம் எதிர்நோக்கும் சவால்கள், அச்சுறுத்தல்கள் தொடர்பாகவும் அவற்றை வெற்றி கொள்வதற்கான கூட்டுச் செயற்பாடுகள் தொடர்பாகவும் இதன்போது கருத்துக்கள் வெளியிடப்பட்டன.
சிங்கப்பூரின் செனல் நிவ்ஸ் ஏசியா நிறுவனத்தின் ஜூலி யோ இக்கலந்துரையாடலை நடாத்தி வைத்தார்.

Post a Comment
Post a Comment