சுற்றுலா தினத்தின் முக்கிய மேற்கோள், சுற்றுலா மூலம், பொருளாதார அபிவிருத்தி, சர்வதேச புரிந்துணர்வு, சமாதானம் ஆகியவற்றை மேம்படுத்துதலும் மனித குலம் முழுவதும் அடிப்படைச் சுதந்தரத்தை அடைவது குறித்த அறிவுகளை பெறுவதும் தான்.
சுற்றுலா தினம்:
சுற்றுலாவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் நோக்கிலும், சுற்றுலாவில் நாட்டின் பொருளாதாரமும் உண்டு என்பதை விவரிக்கும் நோக்கிலும் உலக சுற்றுலா தினம் கொண்டாடப்படுகிறது. உலகில் உள்ள பல்வேறு நாடுகள் சுற்றுலாவை தங்களது கலாச்சாரத்திற்குள் வைத்துள்ளன. சுற்றுலா மூலம் மனித குலத்தை மேம்படுத்தும் வகையில், செப். 27ம் தேதியை உலக சுற்றுலா தினமாக 1970ம் ஆண்டு ஐ.நா.சபை அங்கீகரித்து அறிவித்தது. அவ்வகையில் உலக சுற்றுலா தினம் உலக சுற்றுலா நிறுவனத்தின் (WTO) ஆதரவில் 1980ல் இருந்து கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் பின்னர் தான் சுற்றுலாவுக்கான தினம் என்று ஒன்று தனியாக கொண்டாடப்படுகிறது. இப்போது சுற்றுச்சூழல் சுற்றுலா, பாரம்பரிய சுற்றுலா, கலாச்சார சுற்றுலா, கல்வி சுற்றுலா என பல வகைகளாகப் பிரிந்து வளர்ந்துள்ளது.
சுற்றுலாத்துறை-பொருளாதாரம்:
உலகின் மிகப்பெரிய துறையாக விளைவது நம் சுற்றுலாதுறை தான். உலகின் இரண்டாவது மிகப்பெரிய தொழில் சுற்றுலா. போக்குவரத்துறை, உணவுத்துறை, இடவசதி, ஓய்வு மற்றும் கேளிக்கை என 5 துறைகளை சார்ந்து விளங்குகிறது சுற்றுலா துறை. வளரும் நாடுகளுக்கு மிகப்பெரிய பலம் சுற்றுலா தான். 2010ன் கணக்குப்படி 940 மில்லியன் சர்வதேச சுற்றுலா பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 2009ல் ஏற்பட்ட பொருளாதார மந்தத்தின் காரணமாக 2008ன் இரண்டாம் பாதியிலிருந்து 2009ன் இறுதிவரை சரிவைக் கண்டது. சுற்றுலாத்துறை பல உலகநாடுகளின் முக்கிய தொழில்துறையாக இன்றளவும் இருக்கிறது
‘கண்கவர் வரிசையில் நாமில்லை’ ?!!! :
மூன்றாம் உலக நாடுகளின் சுற்றுலா பெரும் வருவாய் ஈட்டித்தரும் துறையாகப் பார்க்கப்படுகிறது. சுற்றுலாவுக்கு அடிப்படையானது சுற்றலாடாகும். திட்டமில்லாத கட்டுபாடில்லாத சுற்றுலா என்பது சுற்றாடலில் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். நாடுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ஆண்டை எடுத்துக்கொண்டு அந்த ஆண்டு முழுவதும் தங்களது நாட்டின் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் வழக்கமுறை ஒன்று உள்ளது. சென்ற ஆண்டு அதிக வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவர்ந்த நாடுகள் என்ற பட்டியல் ஒன்று வெளியிடப்பட்டது. இதில் சோகம் என்னவென்றால் அந்த பட்டியலில் இந்தியா இல்லவே இல்லை மக்களே!
ஸ்பேஸ் போர்ட்க்கு ரெடியாகிறது உலகம்:
தற்போது விஞ்ஞான ஆராய்ச்சிகளில் நடந்துவரும் முன்னேற்றத்தை பார்க்கும்போது, இன்னும் சில காலங்களில் சுற்றுலா பயணிகளை விண்ணுக்கு சுமந்து செல்ல ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இந்த திட்டதிற்கு ஸ்பேஸ் போர்ட் அமெரிக்கா என பெயரிட்டுள்ளனர். இந்த திட்டம் வெற்றிபெற்றால், நாம் கற்பனையிலும் நினைக்கமுடியாத ஒரு பயணம் சாத்தியம் ஆகும். யாருக்கு தெரியும்? வருங்காலத்தில் விண்வெளிக்கான சுற்றுலா தினம் கொண்டாடினாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை!!!!!

Post a Comment
Post a Comment