நாடு முன்னோக்கி பயணிக்கின்றது,அனைத்து பிரச்சினைகளையும் எதிர்கொண்டு




இன்று தாமரை மொட்டுவின் மக்கள் சக்தியோ ஊடகங்கள் உருவாக்கிய போலி சக்தியோ தற்போது எஞ்சியில்லை என்றும் ஐக்கிய தேசிய கட்சியின் 72ஆவது ஆண்டு நிறைவு கொண்டாட்டமே தற்போது எஞ்சியுள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். 

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இன்று காலை நடைபெற்ற அந்தக் கட்சியின் 72ஆவது ஆண்டு நிறைவினை முன்னிட்ட வைபவத்தில் பிரதமர் உரையாற்றினார். இதன்போதே அவர் இதனைக் கூறினார். 

நாம் 2015ஆம் ஆண்டில் அதிகாரத்தை கைப்பற்றினோம். தேசிய அரசாங்கம் என்ற ரீதயில் மக்களின் அங்கீகாரத்துடன் நாம் தெரிவானோம். தற்பொழுது நாட்டின் பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு வருகின்றன. பெரும் கடன்சுமையுடன் நாம் பொறுப்பேற்றோம் . 

பல வருடங்களாக உற்பத்தி செய்யப்படாத வயல் நிலத்தையே நாம் பொறுப்பேற்றோம். தற்போது மிகவும் நெருக்கடிக்கு மத்தியில் அறுவடை கிடைத்திருப்பதாகவும், அறுவடை கிடைக்கும் போது சிலர் விமர்சனங்களை முன்வைப்பதாவும் அவர் கூறினார். 

பிரச்சினைகள் அனைத்தையும் எதிர்கொண்டு நாடு தற்பொழுது முன்னோக்கி பயணிக்கின்றது. 2025ஆம் ஆண்டுக்கு பின்னரும் முன்னோக்கி பயணிப்போம் என்று அவர் கூறியுள்ளார். 

´வேலை செய்யும், வேலை செய்த 72´ என்ற தொனிப் பொருளில் 72வது அண்டு நிறைவு விழா இன்று காலை ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நடைபெற்றது. 

ஐக்கிய தேசிய முன்னணியை பிரதிநிதித்துவம் செய்யும் கட்சித் தலைவர்களும் இதில் பங்கேற்றிருந்தனர்.