(காரைதீவு நிருபர் சகா)
உலக புதியகல்வியின் போக்கு என்ற தலைப்பிலான பயிற்சிப்பட்டறையொன்றில் பங்குபற்றுவதற்காக இலங்கையிலிருந்து 32 கல்வித்துறைசார் அதிகாரிகள் இன்று(28)வெள்ளிக்கிழமை தாய்லாந்து பயணமாகின்றார்கள்.
இப்பயிற்சிப்பட்டறை நாளை 29ஆம் திகதி தொடக்கம் அக்.5ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. கல்வியமைச்சு இதற்கான ஏற்பாட்டைச்செய்துள்ளது.
அம்பாறை மாவட்டத்தின் கல்முனைக்கல்வி மாவட்டத்திலிருந்து சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல்நஜீம் கல்முனை வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் ஆகியோர் பயணமாகின்றனர்.
ஒருவாரகாலத்திற்கு பதில் வலயக்கல்விப்பணிப்பாளர்களாக முறையே எ.அகமட்கியாஸ் மற்றும் டாக்டர் உமர்மௌலானா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஒருவாரகாலப் பயிற்சியில் கலந்துகொள்ள இம்முறை கல்விநிருவாகசேவை அதிகாரிகளுடன் கல்வியியலாளர் சேவையைச்சேர்ந்த 14பேர் கலந்துகொள்கிறார்கள்.
இலங்கையிலிருந்து செல்லும் மூன்றாவது அணி இது என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment
Post a Comment