(க.கிஷாந்தன்)
அட்டன் - டன்பார் பகுதியில் டி 56 ரக துப்பாக்கிக்கு பயன்படுத்தும் 6 ரவைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பகுதியில் உள்ள பூஞ்செடிகள் வளர்க்கும் தோட்டமொன்றில் இருந்து இவை 13.09.2018 அன்று காலை கண்டெடுக்கப்பட்டுள்ளன.
பொது மக்களால் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து இவை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் இராணுவத்தினர் பயன்படுத்தும் கடிகாரமொன்றும் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment
Post a Comment