அறிமுக மற்றும் கடைசி டெஸ்டின் இரு இன்னிங்சிலும் 50-க்கு மேல்- அலஸ்டைர் குக் அசத்தல் சாதனை




இங்கிலாந்து அணியின் முன்னணி தொடக்க பேட்ஸ்மேன் அலஸ்டைர் குக். இவர் கடந்த 2006-ம் ஆண்டு இந்தியாவிற்கு எதிராக நாக்பூரில் நடைபெற்ற டெஸ்டில் அறிமுகமானார். தொடக்க வீரராக களம் இறங்கிய குக் முதல் இன்னிங்சில் 60 ரன்களும், 2-வது இன்னிங்சில் ஆட்டமிழக்காமல் 104 ரன்களும் விளாசி சாதனைப் படைத்தார்.

தற்போது லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தோடு அலஸ்டைர் குக் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுகிறார். முதல் இன்னிங்சில் 71 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 2-வது இன்னிங்சிலும் அரைசதம் கடந்து விளையாடி வருகிறார்.


2006-ல் சதம் அடித்த சந்தோசத்தில் அலஸ்டைர் குக்

இதன்மூலம் அறிமுக டெஸ்டின் இரண்டு இன்னிங்சிலும், கடைசி டெஸ்டின் இரண்டு இன்னிங்சிலும் அரைசதம் அடித்த 2-வது வீரர் என்ற அசத்தல் சாதனையை பெற்றுள்ளார். இதற்கு முன் தென்ஆப்பிரிக்காவின் ப்ரூஸ் மிட்செல் இந்த அரிய சாதனையைப் படைத்துள்ளார்.