வாஷிங்டன்:
உலகின் 5வது அணுசக்தி மிக்க நாடாக பாகிஸ்தான் மாறும் என அமெரிக்காவின் பாதுகாப்பு துறை சார்ந்த நிபுணர்கள் கணித்துள்ளனர்.
பாகிஸ்தான் அணுசக்தி குறித்து ஆய்வு நடத்திய அமெரிக்காவை சேர்ந்த, கிறிஸ்டென்சென், ராபர்ட் எஸ் நாரிஸ் ஜிலியா டையமன்ட் ஆகியோர் தங்களது அறிக்கையில், பாகிஸ்தான் தற்போது 140 முதல் 150 அணு ஆயுதங்கள் வைத்துள்ளது. தற்போதைய நிலை தொடர்ந்தால், அந்த நாடு 2025 ல் 220 முதல் 250 அணுஆயுதங்கள் வைத்திருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.இது நடந்தால், உலகின் 5வது மிகப்பெரிய அணுசக்தி நாடாக மாறும்.
பல விநியோக அமைப்புகள், நான்கு புளூட்டோனியம் உற்பத்தி உலைகள்,, யூரேனியம் செறிவூட்டல் வசதிகள் ஆகியவை விரிவடைந்து உள்ளன. அடுத்த 10 ஆண்டுகளில் பாகிஸ்தானின் அணுஆயுதங்கள் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. அணு ஆயுதங்களை தாங்கி செல்லும் ஏவுகணைகளை தயாரிப்பதில் ஆர்வம் காட்டுகிறது.
சாட்டிலைட் புகைப்படம் மூலம் ஆய்வு செய்ததில் பாகிஸ்தான் ராணுவ மற்றும் விமானப்படை முகாம்களில் அணுஆயுத சக்திகள் தொடர்புடைய வசதிகள் இருப்பதும், மொபைல் லாஞ்சர் வசதிகள் இருப்பதும் தெரியவந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Post a Comment
Post a Comment