சென்னையில் இன்று நடைபெற்ற திமுகவின் பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சியின் தலைவராக மு.க.ஸ்டாலின் அறிவிக்கப்பட்டார்.
அவரை தவிர வேறு யாரும் போட்டியிடாததால் மு.க.ஸ்டாலின் திமுக வின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் க.அன்பழகம் இன்று நடைபெற்ற திமுக பொது குழு கூட்டத்தில் அறிவித்தார்.
இதன்மூலம் 50 ஆண்டுகளுக்கு பிறகு திமுகவின் இரண்டாவது தலைவராகிறார் மு.க.ஸ்டாலின்.
கடந்த ஆகஸ்ட் 7-ஆம் தேதி முன்னாள் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி மறைந்ததையொட்டி காலியாக இருந்த கட்சி தலைவர் பதவிக்கு ஞாயிற்றுக்கிழமையன்று மு.க.ஸ்டாலின் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
அவரை எதிர்த்து யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார் மு.க.ஸ்டாலின்.
திமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகளை பரிமாறியும் திமுக தலைவராக ஸ்டாலின் அறிவிக்கப்பட்டதை கொண்டாடி வருகின்றனர்.
Post a Comment
Post a Comment