தனியார் பஸ் வேலை நிறுத்தம் கைவிடப்பட்டது




தமது கோரிக்கைகளை முன்வைத்து அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை வெற்றியளித்துள்ளதால் நாளைய தினம் (12) நள்ளிரவு முதல் நடத்த திட்டமிடப்பட்டிருந்த வேலை நிறுத்தம் கைவிடப்படுவதாக அனைத்து மாகாண தனியார் பஸ் உரிமையாளர்களின் சங்கம் கூறியுள்ளது. 

எரிபொருள் விரை அதிகரிப்புக்கு எற்றவாறு பஸ் கட்டணத்தை அதிகரிக்கும் விலைச் சூத்திரம், பஸ் போக்குவரத்துக்காக வழங்கப்படுகின்ற கேள்விப்பத்திர முறையில் உள்ள குறைபாடுகள் உள்ளிட்ட பஸ் தொழிற்துறை எதிர்கொண்டுள்ள பல பிரச்சினைகள் சம்பந்தமாக நேற்று போக்குவரத்து பிரதியமைச்சர் மற்றும் செயலாளருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. 

அதன்படி அவர்களின் பிரதான கோரிக்கையான பஸ் போக்குவரத்துக்காக வழங்கப்படுகின்ற கேள்விப்பத்திர முறையை தற்காலிகமாக நிறுத்துவதற்கும், இதுசம்பந்தமாக போக்குவரத்து அமைச்சருடன் பேச்சுவார்த்தை ஒன்றை ஏற்பாடு செய்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் புகையிரத வேலை நிறுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள பொது மக்கள் மற்றும் உயர் தர பரீட்சைக்கு தோற்றுகின்ற மாணவர்களின் நலன் கருதியும் வேலை நிறுத்தத்தை கைவிடுவதாக அந்த சங்கத்தின் ஸ்டென்லி பெர்ணாந்டோ கூறினார்.